Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WeatherUpdate | சென்னைக்கு 390 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

08:18 AM Dec 21, 2024 IST | Web Editor
Advertisement

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி​யில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது. இது ஆந்திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​துக்கு தெற்கே 450 கிமீ தொலை​விலும், சென்னைக்கு வடகிழக்கே 390 கிமீ தொலை​விலும் உள்​ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 26-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும் எனவு கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை முதல் மழை கொட்டி தீர்த்த நிலையில் பிற்பகலில் வெயில் எட்டி பார்த்தது. இதேபோல், இன்று (டிச.21) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களி​லும் மிதமான மழை பெய்​யக்​கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை வேளை​யில் ஓரிரு இடங்​களில் லேசான பனிமூட்டம் காணப்​படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி​களை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும் எனவும் நகரின் ஒருசில பகுதி​களில் லேசான மழை பெய்​யக்​கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
IMDnews7 tamilRainrain alertRain UpdateTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article