Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WeatherUpdate | இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

07:34 PM Dec 09, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், நேற்று முன்தினம் (டிச. 7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் வட மாவட்டங்களின் சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Next Article