#RainUpdate | "வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி" - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது.
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை உருவானது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (அக்.15ம் தேதி) ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.
அதனைத் தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கரையோரம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.