Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாம ஜெயிச்சிட்டோம் மாறா..." - பிளஸ் 2 தேர்வில் அசத்திய 70 வயது மூதாட்டி!

பிளஸ் 2 தேர்வில் 70 வயதான மூதாட்டி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
03:10 PM May 08, 2025 IST | Web Editor
பிளஸ் 2 தேர்வில் 70 வயதான மூதாட்டி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
Advertisement

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். ஏப்ரல் 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

Advertisement

இதையும் படியுங்கள் : பிளஸ் 2 தேர்வில் தோல்வி – மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி, அதாவது திட்டமிட்டதற்கு முன்கூட்டியே விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து, இன்று (மே 8) 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்பே நிறைவு பெற்றதால் 1 நாள் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் 7, 53,142 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், கோவை கலிங்கநாயக்கன்பாளகயத்தைச் சேர்ந்த மூதாட்டி ராணி (70) 2 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். அவர் 600 க்கு 346 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சட்டபடிப்பு படிக்க விரும்பியதாகவும், மதிப்பெண்கள் குறைந்ததால் யோகா பட்டபடிப்பு படிக்க உள்ளதாகவும் அவர் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

Tags :
12 th Result12th ResultsCoimbatorenews7 tamilNews7 Tamil UpdatesTN result
Advertisement
Next Article