Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜயகாந்த் எந்த நோக்கத்துடன் கட்சி தொடங்கினாறோ அதை நாங்கள் நிறைவேற்றுவோம் - பிரேமலதா பேட்டி!

12:51 PM Jan 28, 2024 IST | Web Editor
Advertisement

மறைந்த விஜயகாந்த் எந்த நோக்கத்துடன் இந்த கட்சி தொடங்கினாறோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். அவருடைய நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Advertisement

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியின் கொடி கடந்த ஒரு மாதமாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக கொடி முழு கம்பத்தில் பறக்க விட வேண்டுமென கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கட்சியின் கொடியை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முழு கம்பத்திற்கு ஏற்றினார். முன்னதாக, கட்சிக் கொடியினை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு தேமுதிக தலைமை கழகத்தில் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கட்சியின் கொடி தற்போது முழு கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சி கொடியினை ஒரு மாதத்திற்கு பிறகு முழு கம்பத்தில் ஏற்ற வேண்டும் என முடிவு செய்து இருந்தோம். அதனை இன்று ஏற்றியுள்ளோம். கொடி ஏற்றும் போது கயிறு அறுந்து அரை கம்பத்தில் இருந்து விழுந்தது. ஒரு தடைக்கு பிறகு தான் ஒரு வெற்றி அமையும். அதற்கு இந்த கொடி அருந்து விழுந்தது ஒரு எடுத்துக்காட்டு.

மறைந்த விஜயகாந்த் எந்த நோக்கத்துடன் இந்த கட்சி தொடங்கினாறோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். அவருடைய நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும். இந்த இடம் ஒரு கோயிலாக பொதுமக்கள் தினம் வழிபாடு செய்யும் தளமாக மாற்றப்பட உள்ளது. வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் தினமும் நினைவிடத்திற்கு வரும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்த அனைத்து உதவிகளை நாங்கள் தொடர்ந்து செய்ய உள்ளோம். விஜயகாந்த்க்கு பொது இடத்தில் மணிமண்டம் கட்ட வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கான ஆணை ஏதும் எங்களிடம் இன்னும் வரவில்லை.

அவருடைய நினைவிடம் இது ஒரு ஜீவ சமாதியாக அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். விஜயகாந்த் மறைந்த ஒரு மாதங்கள் தான் கடந்துள்ளது. கூடிய விரைவில் தலைமை கழகத்தில் செய்தியாளர் சந்திப்பு இருக்கும். அந்த சந்திப்பில் அரசியல் கேள்விக்கு கண்டிப்பாக பதில் அளிப்பேன்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
DMDKflagNews7Tamilnews7TamilUpdatesPremalatha vijayakanthTamilNaduVijayakanth
Advertisement
Next Article