"திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் தான். இந்த முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி. இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்து, உங்கள் களப்பணியின் மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாகக் கூறுகிறேன். நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம்’ என்று பேசினார்.
இந்த நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க எஸ்.ஐ.ஆர். பணிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு உதவிய கழகத்தினரைப் பாராட்டுகிறேன்!
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் வரையிலும் நமது பணி முழுமையடையாது.
தொடர்ந்து மக்களைச் சந்தித்து, நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளைச் சொல்லி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என அவர்களது துணையுடன் மக்களாட்சியைக் காப்பாற்றுவோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.