“இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசு சார்பில் கொண்டாடவுள்ளோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் வேலியண்ட் சிம்பொனியை கடந்த (மார்ச்.08) லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். சிம்பொனி அரகேற்றத்திற்கு முன்னதாக திமுக, அதிமுக, பாஜக, விசிக, நாதக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இளையராஜாவை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். அதேபோல் அவர் சென்னை திரும்பிய அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாழ்த்தி வழியனுப்பி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.