Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

10:50 AM May 01, 2024 IST | Web Editor
Advertisement

காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Advertisement

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தி­னப் பூங்­கா­வில் அமைந்­துள்ள மே தின நினை­வுச் சின்­னத்­திற்கு நீர்­வ­ளத்துறை அமைச்சர் துரை­மு­ரு­கன் மல­ரஞ்­சலி செலுத்தினார்.  இந்த நிகழ்ச்­சி­யில் டி.ஆர்.பாலு எம்பி, ஆர்.எஸ்.பாரதி, கனி­மொழி எம். பி,  ஆ.ராசா எம்பி, திமுக செய்­தித் தொடர்­புச் செய­லா­ளர் டி.கே.எஸ்.இளங்­கோ­வன் ஆகியோர் கலந்து கொண்டு மே தின நினை­வுச் சின்­னத்­திற்கு மல­ரஞ்­சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

"மனித வரலாற்றில் ஒரு உரிமையைப் பெற்ற நாள் இன்று.  ஒரு காலத்தில் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் இரவு பகல் பாராமல் வேலை வாங்குவது என்ற கொடுமையான நிலைமை உலகம் முழுவதும் இருந்தது.  அந்த நிலைமை மாற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே சில உரிமை பெற்ற தொழிற்சங்கங்கள் போராடினார்கள்.

அந்தப் போராட்ட விளைவாக தான் மனித வர்க்கத்திற்கு விடுதலை கிடைத்தது.  திமுகவை பொருத்தவரை எங்களுடைய தொழிற்சங்கப் பிரிவு,  தொழிலாளர் வர்க்கத்திற்காக நீண்ட நெடுங்காலமாக போராடி பல்வேறு தியாகங்களை செய்து பல வெற்றிகளை
பெற்றுள்ளது.  என்றாவது ஒரு நாளாவது கர்நாடக அரசு தண்ணீர் தரும் என்று சொல்லியுள்ளதா? கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட சொல்லியும் அவர்கள் தண்ணீர் திறக்கவில்லை.  காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்."

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Tags :
DMKDurai MuruganMay 1stMay Day2024Workers Day
Advertisement
Next Article