Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பிரதமர் மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம்” - மகாராஷ்டிர முதலமைச்சர் பதவி குறித்து #EknathShinde விளக்கம்!

08:58 AM Nov 28, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு நவ.20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி அரசான பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாயுதி எனும் கூட்டணி அமைத்து களமிறங்கியது. அதேபோல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாதி எனும் கூட்டணி அமைத்து களமிறங்கியது.

இதில் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக 132 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றன. மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. முதலமைச்சர் பதவியை பிடிப்பதில், ஏக்நாத் ஷிண்டேவுக்கும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிசுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தானே நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது,

"நான் எப்போதும் என்னை ஒரு முதலமைச்சராக கருதியதில்லை, சாமானிய மனிதனாகவே கருதுகிறேன். புகழ்பெற வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து மக்களுக்காக இதுவரை நான் செய்த பணிகள் திருப்தி அளிக்கின்றன. மீண்டும் முதலமைச்சர் பதவியை நான் விரும்பவில்லை.

மகாயுதி கூட்டணியில் இருந்து யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு சிவ சேனா ஆதரவு அளிக்கும். பிரதமர் மோடியே இதில் முடிவெடுக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். இது தொடர்பாக நான் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன். அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்யச் சொன்னேன். அந்த முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று அவர்களிடம் உறுதியளித்தேன்"

இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article