Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்" -  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

01:38 PM Apr 03, 2024 IST | Web Editor
Advertisement

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில்,  தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையும் படியுங்கள் : முதலில் அமித்ஷா... அடுத்து பிரதமர் மோடி... - தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கும் பாஜக தலைவர்கள்!

இந்நிலையில்,  வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும் என திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,  சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.

அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

"தேர்தலின் போது வாக்காளர்  பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை துல்லியமாகக் காட்டும் கருவியாக விவிபேட் (vvpat) இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்தும் விவிபேட் இணைக்கப்பட்டு இருக்கும்.  வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் காகித வடிவில் வாக்குச்சீட்டுகளாக மாறி விடுவதால் அவற்றை பின்னர் திறந்து எண்ணும் போது,  வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் அதற்கு இணையாக விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்டுள்ள சீட்டுகளும் சரியாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

மேலும்,  வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்கவும் முடிகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.  22 லட்சம் வாக்குகளில் 46,000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம்.  விவிபேட் இயந்திரத்தில் உள்ள சீட்டுகளையும் வாக்கு எண்ணிக்கையின் போது எண்ண வேண்டும்.  மேலும்,  வாக்கு இயந்திரங்களில் 2ஜி தொழில்நுட்பத்துடன் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்"

இவ்வாறு  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Tags :
DMKElection2024Elections2024organizational secretaryRS BharatiVVPAT
Advertisement
Next Article