‘மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்...ஆனால், அச்சம் வேண்டாம்...’ - மன்சுக் மாண்டவியா
‘நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை’ என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் கோவிட் குறித்த ஆய்வுக் கூட்டத்தை இன்று நடத்தினார்.
"வரவிருக்கும் குளிர்காலம் மற்றும் திருவிழாக்களை கருத்திற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது இணைந்து பணியாற்றும் நேரம் இது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை. மருத்துவமனைகளை தயார்படுத்தல், கண்காணிப்பு பணியை அதிகரித்தல் போன்றவை மிக அவசியம்.
மாதத்திற்கு ஒருமுறை அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதார ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளும் கிடைக்கும் என மாநிலங்களுக்கு உறுதி அளிக்கிறேன். சுகாதாரம் அரசியலுக்கான இடம் அல்ல.
இவ்வாறு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டியா கூறினார்.