"உக்ரைனில் போரை நிறுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என நம்புகிறோம்" - அமெரிக்கா வேண்டுகோள்!
உக்ரைனில் போரை நிறுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா, ரஷ்யா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் இந்திய-ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பின் உச்சி மாநாடு நடைபெறவில்லை.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினின் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதனையடுத்து, இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரஷ்யாவில் உக்ரைன் போர் குறித்து பேசிய பிரதமர் மோடி, "அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது. உக்ரைன் பிரச்னைக்கு போர் தீர்வல்ல, போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து விதமான பங்களிப்பையும் ஆற்ற இந்தியா தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
"உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும். இது முக்கியமான ஒன்று. ரஷ்யாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அமைதிக்கான நடவடிக்கையை எடுக்கவும் அந்நாட்டு அதிபர் புதினை ஊக்குவிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. உக்ரைனில் போரை தொடங்கிய புதினால், அதனை முடிக்கவும் முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.