Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம்... இல்லையெனில்...” - சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் பேட்டி

10:48 AM Apr 20, 2024 IST | Jeni
Advertisement

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை 3 மக்களவை தொகுதிகள் இங்குள்ளன. அந்த வகையில், வட சென்னை தொகுதியில் 60.13%, தென் சென்னையில் 54.27% மற்றும் மத்திய சென்னையில் 53.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

“வாக்களிப்பதில் நகர்ப்புற மக்களிடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பலரும் வாக்களிக்க தயங்குகின்றனர். சுணக்கம் காட்டுகின்றனர். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அதிகளவு வாக்குப்பதிவை பெற மண்டல அளவிலான அதிகாரிகள் மூலம் நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம்.

இதையும் படியுங்கள் : வாக்களிப்பதில் சுணக்கம் காட்டிய மக்கள்? – தமிழ்நாட்டில் சரிந்த வாக்குப்பதிவு சதவிகிதம்!

தொடர் விழிப்புணர்வு மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அவற்றை செய்யாமல் இருந்திருந்தால், இந்த அளவு கூட வாக்குப்பதிவு சதவிகிதம் வந்திருக்காது”

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags :
ChennaiElection2024Elections2024ElectionswithNews7tamilRadhakrishnan
Advertisement
Next Article