Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

12:57 PM Dec 18, 2023 IST | Jeni
Advertisement

நெல்லையில் மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

பின்னர் நியூஸ்7 தமிழின் தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமாருக்கு அவர் பிரத்யேகமாக பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

“நெல்லையில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. எல்லா பகுதிகளில் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லைக்கு வந்து மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.  நெல்லையில் இன்று மாலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம்.  சூலூரில் இருந்து உணவுப் பொட்டலங்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ” என்று தெரிவித்தார்.

Tags :
floodsHeavyRainNellaiThangamThennarasuTirunelveliTNGovt
Advertisement
Next Article