Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு, புதுச்சேரியில் எந்த தொகுதியிலும் போட்டியிட தவாக தயார் - வேல்முருகன் பேட்டி!

12:40 PM Mar 02, 2024 IST | Web Editor
Advertisement

திமுகவிடம் ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்தெரிவித்துள்ளார்.  

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி,  தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் கூட்டணி,  தேர்தல் பரப்புரை,  தொகுதி பங்கீடு,  தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.  இந்த நிலையில், திமுக - தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:

“திமுக தலைமையின் மாபெரும் வெற்றிக் கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்,  சட்டமன்ற தேர்தல் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி பயணித்து வந்துள்ளது.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளோம்.  அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்துள்ளோம்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக சட்டமன்றத்தில் எவ்வாறு தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறதோ அதுபோல நாடாளுமன்றத்தில் ஒழிக்க வேண்டும் என எமது கோரிக்கையையும் கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்.

திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு கண்டிப்பாக எங்களுக்கு ஒரு தொகுதியை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுகவிடம் வைத்துள்ளோம்.

நேற்று முதல்வரை சந்தித்தபோது கண்டிப்பாக நாளை உங்கள் குழு அழைத்து பேசும் என்று சொன்னார்.  அது போலவே குழு அழைத்துள்ளது.  திமுகவின் குழுவில் எங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.  கண்டிப்பாக உறுதியான அங்கீகாரம் திமுகவிடம் கிடைக்கும்.

நியாயமான, நீதியான நேர்மையான தமிழக மக்களுக்காக பிரச்சனைகளின் என்னுடைய வாதம் சட்டமன்றத்தில் எடுத்து வைத்துள்ளேன்.  குரலற்ற மக்களின் குரலாக தொடர்ந்து சட்டமன்றத்தில் ஒழித்து வருகிறேன்.  சட்டமன்றத்தில் நான் மக்களின் குரலாக ஒழிப்பதை போலவே என்னுடைய கட்சியை சார்ந்தவர்களும் நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலாக ஒழிக்க வேண்டும் என்று என்னுடைய கோரிக்கையை திமுகவிடம் வைத்துள்ளேன்.  திமுக பாண்டிச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் தமிழக வாழ்வுரிமை கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது”

இவ்வாறு தவாக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கூறினார்.

Tags :
DMKElection2024Parliament Election 2024tamilaga valvurimai katchitvkvelmurugan
Advertisement
Next Article