Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#JaspritBumrah-வை புகழ்ந்த கௌதம் கம்பீர்!

02:15 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

“பும்ரா நல்ல ஃபார்மில் உள்ளார். டி20, ஒருநாள் போட்டிகளில் சாதித்துள்ளார், அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம்” என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி சென்னை சென்னை விரைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். ஆனால் மற்றவர்களின் திறமையை மதிப்போம். களத்தில் இரண்டு அணிகளுமே சிறந்த அணிகள் தான். யார் வியூகங்களை சிறப்பாக கட்டமைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

அஸ்வின், குல்தீப் இருவரும் முதல் நாளில் இருந்து ஐந்தாவது நாள் வரை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய மைதானங்களில் இருவரும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள். இந்த டெஸ்ட் போட்டியில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமையும். வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் மூத்த வீரர்கள், இளைய வீரர்கள் என அனைவரிடமும் சுமூகமான உறவில் தான் இருக்கிறேன். இது அணியின் வெற்றிக்கு முக்கியமானது.

எப்பவும் பேட்ஸ்மேன்கள் பற்றியே கேள்வி கேட்கப்படும். பந்துவீச்சாளர்களை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது மகிழ்ச்சியே. பும்ரா, சிராஜ், சமி, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் பந்துவீச்சாளர்களை பற்றி பேசவைத்துள்ளார்கள். பும்ரா நல்ல ஃபார்மில் உள்ளார். டி20, ஒருநாள் போட்டிகளில் சாதித்துள்ளார். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்தால், வேகப்பந்துவீச்சாளர்களை பற்றி விமர்சனம் செய்வதில்லை. ஆனால் இந்தியாவில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் முடிந்தால் சுழற்பந்துவீச்சாளர்களை விமர்சிக்கிறோம். மைதானத்தை விமர்சிக்கிறோம். இது தவறான அனுகுமுறை” என தெரிவித்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
BowlersCricketgautam gambhirJasprit Bumrah
Advertisement
Next Article