Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம்’ - தமிழ்நாடு அரசு!

07:23 AM Aug 02, 2024 IST | Web Editor
Advertisement

ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் நியாய விலைக் கடைகளில் பருப்பு, எண்ணெய், அரிசி, சர்க்கரை போன்றவை குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களை மொத்தமாக டெண்டர் மூலம் கொள்முதல் செய்து அரசு வழங்கி வருகிறது.

சில சமயங்களில் டெண்டர் மற்றும் கொள்முதலுக்கு தாமதமாகும் போது, அம்மாதம் மக்களுக்கும் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதத்தில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாக இந்த தட்டுப்பாடு இருந்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் அதனை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

2024 ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், 2024 ஜூலை மாதத்தில் அதனை பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 2024 ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக 2024 ஜுலை மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஜூலை மாதத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால், குடும்ப அட்டைதாரர்களால் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.

ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள், அவற்றை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
fair price shopspalm oilPigeonpeaTN Govt
Advertisement
Next Article