Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயலாற்றி வருகிறோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

07:12 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயலாற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லம் - வடகால் கிராமத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 18 ஆயிரத்து 720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.706.50 கோடி மதிப்பீட்டில் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா இன்று (ஆக. 17) மாலை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்து பெண் பணியாளர்களுக்கு சாவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“2023-24இல் இந்தியாவின் ஜிடிபியில் 1.19% பங்களிப்போடு 2வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் தான் பொருளாதாரம் முன்னேறும் என்பதால் அதில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 39,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் தொழிற்பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயலாற்றி வருகிறோம்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மூலம் 1 டிரில்லியின் டாலர் இலக்கை எட்டுவோம். நிதி ஆயோக் அமைப்பின் 2023 - 24ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தொழிற்துறைக்கு சாதகமான எல்லா அம்சங்களும் ஒருங்கமையப் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக, சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Tags :
CMO TamilNadueconomyFoxconnMK StalinNews7Tamilnews7TamilUpdatessipcotTN Govt
Advertisement
Next Article