”திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாங்கள் மட்டுமே” - பழனிசாமிக்கு சீமான் பதில்!
விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கிளினிக்கை அக்கட்சியின்
ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதன் பின்
செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருப்பதை பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர்,
”திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாங்கள் மட்டும் தான். தீமைக்கு மாற்று தீமை இல்லை, நெருப்பை நெருப்பை வைத்து அனைப்பது கடினம் நீரை வைத்துதான் நெருப்பை அனைக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர், தமிழகத்துக்கு ஏன் தேசியக்கட்சிகள் தேவை ? மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்கள்தான் இந்திய கட்சிகளின் தேவையை ஏற்படுத்துகிறார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் தேவையை நிறைவேற்றி
இருந்தால் தேசிய கட்டிசிகள் வர வேண்டிய தேவை இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறுவது கர்நாடகாவில் பாஜகவும், காங்கிரஸ் தான் , முல்லைபெரியாறு பிரச்னைகளுக்கு பாஜக காங்கிரஸ் கட்சிகள் தான் நிற்பார்களாக அல்லது திராவிட கட்சிகள் தான் நிற்பார்களா ? எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், ”அதிமுக நேரிடையாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளார்கள் திமுக மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
கூட்டணி வைக்காத பாஜக கருணாநிதி நாணயம் வெளியிட வருகிறார் ஜெயலலிதா கூட்டணி வைத்த போது வரவில்லை. மூன்று முறை நிதி ஆயோக் கூட்டதிற்கு செல்லாத ஸ்டாலின் அமலாக்கதுறை சோதனை வருகிறது என்றவுடன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்கிறார்.”
எனத் தெரிவித்தார்