Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சண்டை நிறுத்த நீட்டிப்புக்கு தயாராக இருக்கிறோம்” - ஹமாஸ் அமைப்பு

12:51 PM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

சண்டை நிறுத்த நீட்டிப்புக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது  ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.  பலமுறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.  இஸ்ரேல்,  காஸா மீது நடத்தி வரும் தாக்குலில் இதுவரை குழந்தைகள்,  பெண்கள் உள்பட 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பல திரைப்பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து,  ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது.  அதற்காக காஸா பகுதியை முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம்,  தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.  இதற்கிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக சர்வதேச நாடுகளின் உதவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில், சில பிணைக் கைதிகளை மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வகையில்,  பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 22ஆம் தேதி அறிவித்தார். அதோடு,  50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.  அதே வேளையில்,  இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள்,  குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது.

இதனையடுத்து இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நவம்பர் 24 ஆம் தேதி  முதல் அமலுக்கு வந்துள்ளது.  போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்,  எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்,  சண்டை நிறுத்த நீட்டிப்புக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.  இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட 4 நாள் தற்காலிக சண்டை நிறுத்த உடன்படிக்கையின்படி காசாவில் இரு தரப்பினரின் தாக்குதல்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

மேலும் இரு தரப்பிலிருந்தும் பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அத்துடன் காசா வாழ் மக்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் நான்கு நாள் சண்டை நிறுத்த நீட்டிப்புக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.  அதே நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய படை வீரர்களை சந்தித்துப் பேசிய நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினரை வெற்றி கொள்ளும் வரை சண்டைகள் நிறுத்தப்படாது என உறுதிபட தெரிவித்துள்ளார்.

Tags :
Israel | Palestine | War | Israel Palestine War | Palestine Israel War | Conflict | Hostages | Cease Fire | Bring Them Home Now | Benjamin Netanyahu | Attack | #Spain | Belgium | condemned | Israel |
Advertisement
Next Article