”இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம்” - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!
கடந்த ஏப்ரம் மாதம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7ஆம் இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தேதி தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து இரு நடுகளுக்கும் இடையே எல்லை பதற்றங்கள் ஏற்ப்பட்டது. மேலும் இந்தியா – பாகிஸ்தான்"We are monitoring the India-Pakistan issue daily" - US Secretary of State! நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை எந்த வெளிநாட்டு தலைவரும் நிறுத்த சொல்லவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”போர் நிறுத்தம் செய்வதற்கான ஒரே வழி, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொள்வதுதான். ரஷ்யர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதையும் தாண்டி, போர் நிறுத்தங்களைப் பற்றிய சிக்கல்களில் ஒன்று, அவை பராமரிக்கப்பட வேண்டும் என்று நான் கூறுவேன், இது மிகவும் கடினம். அதாவது, ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே என்ன நடக்கிறது, கம்போடியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையே என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்," என்று கூறினார்.