Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாங்கள் மருத்துவர்கள்.. குழந்தைகள் அல்ல.. இந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.." - முதுகலை நீட் தேர்வு ரத்து தொடர்பாக பெண் பேசிய வீடியோ வைரல்..!

08:04 AM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

"நாங்கள் மருத்துவர்கள்.. குழந்தைகள் அல்ல.. இந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.."  என முதுகலை நீட் தேர்வு ரத்து தொடர்பாக பெண் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. 

Advertisement

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு நேற்று( ஜூன் 23 )நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் சனிக்கிழமை இரவு  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.

இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை சார்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள சூழலில் மத்திய சுகாதாரத்துறை முதுகலை நீட் தேர்வை ஒத்திவைப்பதாக  தெரிவித்துள்ளது.

சில போட்டித் தேர்வுகளின் அறம் சார்ந்து எழுந்துள்ள குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வின் செயல்முறையின் தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்யும் நோக்கில் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு வருந்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதுகலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதுகலை நீட் தேர்வு எழுத இருந்த மருத்துவராக பணிபுரியும் பெண் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது..

“ ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருந்த நீட் தேர்வு ரத்து குறித்த அறிவிப்பு சனிக்கிழமை இரவு 9:30க்கு வெளியானது. அதாவது தேர்வுக்கான வினாத்தாள் கொடுப்பதற்கு 12 மணி நேரத்திற்கும் முன்னதாக தேர்வு ரத்து என்கிற அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.  கல்வி அமைச்சகத்தில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க தகுதியுடையவர்களா?

இதன் மூலம் அவர்கள் என்ன விஷயத்தை நிரூபிக்கப் போகிறீர்கள்? நாங்கள் மருத்துவர்கள் சிறு குழந்தைகள் அல்ல. உங்கள் கொள்கைகளால் நீங்கள் அழித்துக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் இருக்கவே அவர்கள் இந்த தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் இங்கே படித்துவிட்டு எல்லோரும் ஏன் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கேள்வி கேட்கிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

Tags :
#PostponedNEETNEET PGviral video
Advertisement
Next Article