Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WayanadLandslide | பிரியாணி வழங்கி நிதி திரட்டிய டிஒய்எப்ஐ சங்கத்தினர்!

03:39 PM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரியில் டிஒய்எப்ஐ சங்கத்தினர் பிரியாணி வழங்கி வயநாடு மக்களுக்கு நிதி திரட்டியுள்ளனர்.

Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

ராணுவப் படையினரும் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100- க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பலர் நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எப்ஐ) பிரியாணி வழங்கி வயநாடு மக்களுக்கு நிதி திரட்டினர்.

இந்த நிகழ்ச்சியை தமிழக பால்வளத் துறைஅமைச்சர் மனோ தங்கராஜ் பணம் கொடுத்து முதல் பிரியாணியை வாங்கி துவங்கி வைத்தார். அதேபோல், ஏராளமான பொதுமக்களும் பிரியாணியை வாங்கி சென்றனர்.

Tags :
disasterdyfiKeralaKerala LandslidesWayanad Landslides
Advertisement
Next Article