Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வயநாடு நிலச்சரிவு - 3 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் வழங்கும் ஏர்டெல்!

10:17 AM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுளள வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், வேலிடிட்டி நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

Advertisement

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து ஜுலை 29 அன்று வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கனமழை காரணமாக நேற்று முன் தினம் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முதல் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மேப்பாடி என்ற பகுதியில் தற்காலிக மின்மயானம் அமைத்து எரியூட்டி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அவரவர் மதத்தின் சார்பில் இறுதி மரியாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக, உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் தற்காலிக மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.  அப்போது செல்லும் போது சாலையோரம் இருந்த பொதுமக்கள் பூக்கள் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், தற்காலிக மின்மயானத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.

இந்த சூழலில் இன்று கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு,கண்ணூரர்,கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், வேலிடிட்டி நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  மேலும், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Heavy rainfallKeralakerala landslideNatural DisasterPray For WayanadWayanadWayanad Landslides
Advertisement
Next Article