Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்!

04:07 PM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

நீர்ச்சத்துக்காக நாம் சாப்பிட வேண்டிய சில பானங்கள் மற்றும் உணவுகளை இங்கு காண்போம். 

Advertisement

வெயிலில் சென்று வந்தவுடன் அனைவருக்கும் தாகம் எடுக்கும். நாம் தண்ணீரை குடிப்போம். இருப்பினும் எதாவது ஜூஸ் குடித்தால் நல்லா இருக்குமே என வரும்போதே கடையில் ரசாயனங்கள் கலந்த குளிர்பானங்களை வாங்கி வந்து பருகுவோம். இதனால் எந்த பலனும் இல்லை. நீர்ச்சத்தும் இல்லை. வெயிலில் களைப்பாக வரும் நாம் நீர்ச்சத்துக்காக சாப்பிட வேண்டிய சில பானங்கள் மற்றும் உணவுகளை இங்கு காண்போம்.

தர்பூசணி - லெமன் ஜூஸ் 

தர்பூசணியின் தோலை சீவி, விதைகளை நீக்கிய பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், தேன், புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த ஜூஸை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பருகவும்.

முளைகட்டிய பச்சைப்பயறு சாலட்

பச்சை பயிறை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் நன்றாக வடித்து அதை ஹாட் பேக்கிலோ அல்லது துணியில் கட்டியோ ஒரு நாள் வைக்கவும். மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும். முளைகட்டிய பச்சை பயறை, இரு நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். எலுமிச்சைச் சாறு, மாதுளை பழம், துருவிய கேரட், சீரகம், மிளகு தூள், மாங்காய் தூள். கொத்தமல்லித்தழை, உப்பு கலந்து பரிமாறவும்.

மாம்பழ குச்சி ஐஸ்

மாம்பழத்தை தோல் சீவி நீள நீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைத்து கொள்ளவும். முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலை நன்கு சுண்ட காய்ச்சவும். அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.

மாவு நன்கு வெந்து கலவை கெட்டியானதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆறவிடவும். பால் அரிசி மா கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும். பின்னர் இதை குச்சி ஐஸ் அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும். குச்சி ஐஸ் அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம். மாம்பழ குச்சி ஐஸ் உறைந்ததும் எடுத்து பரிமாறலாம்.

வெள்ளரிக்காய் கறி

வெள்ளரிக்காயை துண்டு துண்டாக வெட்டி, அரை கப் தண்ணிரீல் கொஞ்சம் உப்பு சேர்த்து மெதுவாக வதக்கவும். அதில் தேங்காய், இஞ்சி, மிளகாய், கடுகு, கொத்தமல்லி போன்றவற்றை அரைத்து விழுதாக சேர்க்கவும். இதனை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு லேசான சூட்டில் சமைத்து அதில் கொஞ்சம் தயிர் சேர்த்து பறிமாறலாம்.

Tags :
DrinksHealthy FoodsHeatwaveHydrating Dishes
Advertisement
Next Article