என்னது ரூ.1.5 கோடிக்கு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் நீர்க்கசிவா?பேசுபொருளான புகைப்படம்!
பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தனது அறையில் நீர்க்கசியும் புகைப்படத்தை பகிர்ந்து கட்டுமானம் குறித்து குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ரூ.1.5 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பில், 5-வது மாடியில் உள்ள தனது அறையில் நீர்க் கசிகிறது. இந்த விலையுயர்ந்த கட்டிடங்கள் யாவும் மோசடி” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவை தொடர்ந்து பெங்களூரின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தரம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.
இந்த பதிவிற்கு பயனர்கள் பலர் தங்கள் சொந்த அனுபவங்களையும், கவலைகளையும் தெரிவித்து வருகின்றனர். பலர் தரமான கட்டுமானத்தைவிட, லாபத்தை முதன்மைபடுத்துவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என தெரிவித்தனர். சிலர் கசிவுக்கான காரணத்தை கண்டுபிடித்து சட்டபூர்வமாக நடவடிக்கையை எடுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளனர். ஒருவர் தனிவீடு இருப்பது நல்லது என தெரிவித்தார்.
கடந்த வாரம் கூட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைநீர் கொட்டியது பேசும் பேசுபொருளானது குறிப்பிடதக்கது.