Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” - பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!

11:28 AM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Advertisement

கர்நாடகாவில் தலைநகரும், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அங்கு ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இதற்காக நீர் நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் முளைத்து வருகிறது.

பெங்களூருவில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்னரே அங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு சுமார் 30% ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும் நகரை சுற்றியுள்ள பல ஏரிகள் வறண்டு கிடக்கிறது.

ஆனால் காவிரி படுகையில் உள்ள 4 அணைகளில் தேவைக்கு போதுமான தண்ணீர் உள்ளதாக பெங்களூரு நகரத்தின் குடிநீர் வழங்கல் வாரியத்தின்  தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்க போதுமான தண்ணீர் உள்ளது. பெங்களூரு முழுவதும் தினமும் 1,470 மில்லியன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் வரும் மே 15-ம் தேதி காவிரி ஐந்தாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் அதன் பிறகு பெங்களூருவுக்கு கூடுதலாக 775 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். நகரின் தற்போதைய தண்ணீர் தேவை 2,100 மில்லியன் லிட்டர் ஆக உள்ளது. அணைகளில் தற்போது 34 டிஎம்சி தண்ணீர் உள்ளது” என தெரிவித்துள்ளார். 

Tags :
BangaloreBengaluruGround WaterKarnatakaNews7Tamilnews7TamilUpdatesRamprasath manoharWaterWater Crisis
Advertisement
Next Article