Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 31,575 கன அடியாக அதிகரிப்பு!

09:41 AM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29,307 கனஅடியில் இருந்து 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

Advertisement

தமிழகம், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100.01 அடியில் இருந்து 102.92 அடியாக உயா்ந்துள்ளது. 2 நாள்களில் நீர்மட்டம் 2.91 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,850 கன அடியிலிருந்து 31,575 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7,500 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 68.67 டிஎம்சியாக உள்ளது.

Tags :
Mettur dam
Advertisement
Next Article