Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Hyderabad பலத்த மழை: விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு!

04:59 PM Aug 21, 2024 IST | Web Editor
Advertisement

தொடர் மழை காரணமாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலும் தொடர் மழை பெய்வதால், பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முஷீராபாத் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையில் நடந்து சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

அதேபோல, வாகனத்தில் சென்ற ஒருவர் வெள்ளத்தில் எதிர்த்தபடி சாலையில் சென்றார். அப்போது அவர், வாகனத்தோடு வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : #IndependenceDay-வில் பறக்காத புறா – அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இந்நிலையில், ஹைதராபாத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில், விமான நிலையத்தின் தரையில் மழை நீர் தேங்கி இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், விமான நிலையத்தின் மேற்கூரையிலிருந்து மழை நீர் கசிந்தது. இதனால், விமான பயணிகள் அவதிக்குள்ளானர்.

Tags :
AirportHyderabadHyderabad airportRainVideoWater
Advertisement
Next Article