Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சைலண்ட்டா நடந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம்?

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
06:52 AM Oct 04, 2025 IST | Web Editor
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்கள் இவர்கள் நடித்த காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

Advertisement

இதற்கிடையே, இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாக செய்தி பரவியது. இருப்பினும் இதுகுறித்து இவர்கள் இருவரின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இவர்கள்  வெளியிடங்களில் ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. தொடர்ந்து, இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளியாகியது. மேலும், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விஜய்தேவரகொண்டாவின் இல்லத்தில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Tags :
ActresscinemaengagementMarriageRashmika Mandannavijay devarakonda
Advertisement
Next Article