Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இரண்டே நாட்களில் மகாராஜா செய்த வசூல் இவ்வளவா?

06:46 AM Jun 17, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஜா  திரைப்படம்  இரண்டே நாட்களில் 15 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டிப்பிடிக்கும் என்கின்றனர் திரையரங்க உரிமையாளார்கள்.

Advertisement

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதால் இந்த வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற நிலையில் முதல் நாளில் நல்ல வசூலை கலெக்ட் செய்தது. கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு முதல் நாளில் வசூலித்த இந்த படம் இரண்டாவது நாளான சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 9 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. நான்கு நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை எட்டும் என சொல்லப்படுகிறது.

Tags :
MaharajaVijaysethupathi
Advertisement
Next Article