மகா கும்பபேளா தீ விபத்தின் போது கங்கா நதியில் இறங்கிய பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?
This News Fact Checked by ‘AajTak’
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, பக்தர்கள் கங்கா நதியில் இறங்கியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பிரயாக்ராஜின் மகா கும்பமேளா பகுதியில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மகா கும்பமேளாவின் கங்கா நதி பகுதியில் நெரிசல் ஏற்பட்டது, அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிர் தப்பினர் என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்தில், பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளா நடைபெறும் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கங்கா நதிப் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது, அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிர் தப்பினர் என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பெரும் கூட்டம் தண்ணீரில் நிற்பதை வீடியோவில் காணலாம். மக்கள் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக நிற்பதைக் காணலாம். இவர்களில் பலர் காவி உடை அணிந்துள்ளனர். மகா கும்பத்திற்கு முன் ராஜ ஸ்நானத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
உண்மை சரிபார்ப்பு:
இதுகுறித்த முக்கிய வார்த்தைகளைத் தேடியதில், இந்த சம்பவம் தொடர்பான பல செய்தி அறிக்கைகள் கிடைத்தன. இவற்றில் வைரலான வீடியோ காட்சிகளை காணலாம். ஆகஸ்ட் 13, 2024 அன்று ஹிந்துஸ்தானில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, பாகல்பூரில் உள்ள எஸ்எம் கல்லூரி கங்கா நதியில் சவான் திங்கட்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் நதியில் இருந்த தடுப்புகள் உடைந்தன. இதனால் மக்கள் ஆற்றில் மூழ்கத் தொடங்கினர். ஆனால் சம்பவ இடத்திலேயே இருந்த SDRF குழுவினர் அனைவரையும் காப்பாற்றினர். அப்போது, இந்த சம்பவம் குறித்த செய்தியை வைரலான வீடியோவுடன் ஆஜ் தக் பதிவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை டைனிக் பாஸ்கர் செய்தியிலும் படிக்கலாம் (https://www.bhaskar.com/local/bihar/bhagalpur/news/stampede-on-the-ghat-many-people-saved-from-drowning-133471418.html)
இந்த சம்பவத்திற்கு முன்பு, பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள சித்தேஷ்வர் நாத் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இந்த காணொளிக்கும் மகா கும்பமேளாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. மகா கும்பத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதைப் பற்றி இதுபோன்ற செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. இது உண்மையாக நடந்திருந்தால், இது ஒரு பெரிய செய்தியாக இருந்திருக்கும், இது குறித்து பல செய்திகள் வெளியாகியிருக்கும்.
Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.