Prescription -ல் கையெழுத்து புரியும்படி இருந்ததால் மருத்துவரின் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதா ? - #FactCheck
This News Fact Checked by ‘Factly’
நோயாளிக்கு வழங்கிய மருந்துச் சீட்டில் மருத்துவரின் கையெழுத்து புரியும்படி இருந்ததால் அவரின் மருத்துவச் சான்றிதழை ரத்து செய்ததாக சமூக ஊடகங்களில் செய்தித் துணுக்கு வைரலாக பரவியது. இது குறித்து உண்மைத் தன்மையை காணலாம்.
மருத்துவமனைக்கு ஒரு நோயாளி சென்றால் அவரை பரிசோதித்து பார்க்கும் மருத்துவம் அவருக்கு ஏற்படும் நோயின் தன்மையை பொருத்து மருந்துகளை பரிந்துரைப்பார். அதன்படி மருந்துகளை மருந்துச் சீட்டில் எழுதிய பின்னர் அதனை பெற்று மருந்தகத்தின் மூலம் மருந்து மற்றும் மாத்திரைகளை பெற்றுக் அதனை பயன்படுத்தி வருவர்.
இது ஒரு வழக்கமான நடைமுறைதானே இதில் என்ன வியப்பு என கேள்வி எழும்புகிறதா..? அப்படி இல்லை நோயாளிக்கு மருத்துவர் வழங்கும் மருந்துச் சீட்டு எப்போதுமே ஒரு வியப்பான ஒன்றுதான். காரணம் மருந்துச் சீட்டில் இடம்பெற்ற மருந்துகள் பெரும்பாலும் நோயாளிக்கு புரிய வாய்ப்பில்லை. அந்த ரகசியம் மருந்துக் கடைக்காரர்களுக்கு மட்டுமே புரியும்.
இந்த நிலையில் ஒரு மருத்துவர் தன்னிடம் வந்த நோயாளிக்கு மிகவும் தெளியான கையெழுத்திலும் நோயாளியே புரிந்துகொள்ளும்படியும் மருந்துச் சீட்டை வழங்கியதால் மருத்துவக் கவுன்சில் அவரின் மருத்துவச் சான்றிதழை ரத்து செய்ததாக ஒரு செய்தி பரவியது. செய்தித்தாளின் பிரதியுடன் அந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை செய்தியின் உண்மையை அறிய இந்த பதிவுடன் தொடர்புடைய வார்த்தைகளை கூகுள் கீவேர்டு தேடலுக்கு உட்படுத்தினோம். இந்த தேடலின் முடிவில் 11 டிசம்பர் 2019 தேதியிட்ட நவ்பாரத் டைம்ஸ் அறிக்கையின் கிடைத்தது. அதில் “மருத்துவர் எழுதிய மருந்துச் சீட்டை நோயாளி புரிந்து கொண்டதால் மருத்துவ கவுன்சில் அவரது சான்றிதழை ரத்து செய்தது.” என தற்போது வைரலாவது போன்றே குறிப்பிட்டிருந்தது.
இதனை ஆய்வு செய்தபோது நவ்பாரத் டைம்ஸ் பத்திரிகையில் நகைச்சுவை மற்றும் கிண்டல் தொணியில் எழுதப்படும் கட்டுரைகளான " ஹவாபாஜி " என்ற பிரிவின் கீழ் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. . இந்தப் பிரிவானது நகைச்சுவைகள், மீம்ஸ்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஒரு பிரிவாகும்.
இதேபோல அவர்களின் சமூக ஊடக நகைச்சுவைப் பிரிவில் நாங்கள் ஒரு மறுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவை உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்வதை நோக்கத்தில் மட்டுமே அவை எழுதப்படுவதாகவும் அதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் இதுபோன்ற எந்தக் கருத்தையும் நவ்பாரத் டைம்ஸ் ஒப்புக்கொண்டதாகவோ அல்லது ஏற்றுக் கொண்டதாகவோ விளங்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
முடிவு :
சுருக்கமாக சொல்வதானால் 2019 டிசம்பரில் மருத்துவக் கவுன்சில் மருத்துவரின் சான்றிதழை ரத்து செய்ததாக வெளியிடப்பட்ட ஒரு நகைச்சுவை துணுக்கு செய்தியை குறித்து உண்மை என தற்போது பகிரப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.