"வரட்டா மாமே டுர்ர்..." - ஸ்கூட்டரில் ஜாலியாக ரைய்டு சென்ற காளை... வீடியோ வைரல்!
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஒரு தெருவில் காளை ஒன்று சுற்றித் திரிந்தது. அந்த காளை சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஸ்கூட்டருக்கு அருகில் சென்றது. காளை திடீரென ஸ்கூட்டர் மீது தாவியது. இதில் ஸ்கூட்டர் சாலையில் வேகமாக சென்றது. காளையின் பின்னங்கால்கள் தரையிலும், முன்னங்கால்கள் இரண்டும் சீட்டிலும் இருந்தவாறு காளையும் ஸ்கூட்டருடன் ஓடியது.
இதையும் படியுங்கள் : பகல் நேரத்தில் வெளியே போறீங்களா? உஷாரா இருங்க மக்களே… இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!
இது பார்ப்பதற்கு காளை ஸ்கூட்டரில் ரைய்டு செல்வது போன்று இருந்தது. அருகில் இருந்தவர்கள் இதனைப் பார்த்து பயந்து அங்கிருந்து ஓடினர். பின்னர் சிறிது தூரம் சென்ற ஸ்கூட்டர் வேலி போன்று அமைக்கப்பட்ட இரும்புக் கம்பியில் மோதி கீழே விழுந்தது. ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய காளை அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தது.
இது தொடர்பான சிசிடிவி காட்சி Ghar Ke Kalesh என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது. அதில், "நீங்கள் பலமுறை ஸ்கூட்டி திருடுவதைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் ரிஷிகேஷில் ஸ்கூட்டி திருட்டு வேறு மாதிரி இருக்கிறது. இங்கே தெருக்களில் சுற்றித் திரியும் காளைகள் கூட பைக்குகளையும் ஸ்கூட்டிகளையும் விரும்புகின்றன" கூறியவாறு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பயனர் காளையை "ஹெவி டிரைவர்" என்று நகைச்சுவையாக கூறினார்.
மற்றொரு பயனர், "ஸ்கூட்டர் உரிமையாளர் திருடன் மனிதனே இல்லை என்பதை எப்படி விளக்குவார்?" என்று நக்கலாகக் கூறினார். மூன்றாவது நபர், "கொம்புகளுடன் தூம்" என்றும் மற்றொருவர், "சகோதரர் இப்போதுதான் டெஸ்ட் டிரைவ் செய்தார், ஒருவேளை அவர் அதை வாங்க திட்டமிட்டிருக்கலாம் என பதிவிட்டார். மேலும் ஒருவர் "இதனால்தான் என் பைக் எப்போதும் கேட் உள்ளேயே இருக்கும்", "காளை காற்றை உணர விரும்யுள்ளது" போன்று கருத்து தெரிவித்தார்.