Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் விளக்கம்!

10:16 AM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

ரஷியா-உக்ரைன் மற்றும்  இஸ்ரேல்-காஸா ஆகிய இரு பகுதிகளிலும் நிலவும் போரின் முடிவுக்கு பிறகே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்களால் முடிவெடுக்க முடியும்' என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

Advertisement

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படும். இந்த நடைமுறையைத்தான் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது;

'சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 'கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. சாமானிய மக்கள் மீது சுமை திணிக்கப்பட்டுள்ளது'

இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சில தினங்களுக்கு முன் குற்றஞ்சாட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து, உச்ச அளவாக கடந்த 21 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கும் நிலையில், விலையை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதா? என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர்.

'அத்தகைய ஆலோசனை எதுவும் இப்போது நடைபெறவில்லை. உலகின் இரு பகுதிகளில் நிலவும் போர்ச் சூழலால், எண்ணெய் சந்தைகள் மிகவும் ஸ்திரமற்ற நிலைமையில் உள்ளன. செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

உலக அளவில் 18 சதவீத எண்ணெய் மற்றும் 4-8 சதவீத இயற்கை எரிவாயு வர்த்தகம் செங்கடல், சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறுகிறது. இதுபோன்ற கொந்தளிப்பான சூழலில், எரிபொருள்களின் இருப்பை உறுதி செய்வதே முதன்மையான பொறுப்பாகும். எண்ணெய் சந்தைகள் ஸ்திரமடைந்த பிறகே எரிபொருள் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்களால் எந்த முடிவும் எடுக்க முடியும்' இவ்வாறு மத்திய அமைச்சர்  ஹர்தீப் சிங் பதில் அளித்தார்.

Tags :
Dieselend of the warHardeep Singh PuriIsrael-Gazaoil companiesPetrolPetroleum MinisterpriceRussia-Ukraine
Advertisement
Next Article