Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா | நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

06:32 PM Aug 09, 2024 IST | Web Editor
Advertisement

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததனர். இந்நிலையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை பரிசீலிக்க கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஆ.ராசா, ஓவைசி, தேஜஸ்வி சூர்யா, இம்ரான் மசூத் உள்ளிட்ட 21 பேர் மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 10 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக திமுக, காங்கிரஸ், சமாஜவாதி, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இக்குழுவில் உள்ளனர்.

இந்நிலையில், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில், நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Joint Parliamentary Committeelok sabhaMinister Kiren RijijuRajya sabhaWaqf Amendment Bill
Advertisement
Next Article