Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு - சுமூக முடிவை எட்டிய பேச்சு வார்த்தை!

சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் சுமூக முடிவை எட்டியுள்ளது!
05:37 PM May 19, 2025 IST | Web Editor
சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் சுமூக முடிவை எட்டியுள்ளது!
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு வேண்டி கடந்தாண்டு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர், தமிழ்நாடு அரசு சார்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை இன்று(மே.19) சுமூக முடிவு எட்டி ஊதியம் உயர்த்தப்பட்டதாக தொழிலாளர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தால் எழுப்பப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தினர் மற்றும் CITU தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு ஏற்பட்டது. இருதரப்பும் ஏற்றுக்கொண்டவாறு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டில் ரூ.9000/- 2026-2027 மற்றும் 2027-2028 ஆண்டுகளுக்கு தலா ரூ.4500/- வீதம் மூன்றாண்டு காலத்திற்கு ரூ.18000/- நேரடி சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு கிடைக்கும். அனுபவத்தின் அடிப்படையிலான சிறப்பு ஊதிய உயர்வு மூன்றாண்டு காலங்களில் ரூ.1000/- முதல் ரூ.4000/- வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும்.

ஒருமுறை சிறப்பு பதவி உயர்வாக 31.03.2025 தேதியில் 6 வருடங்கள் முறையான பணி நிறைவு செய்து பதவி உயர்வு கிடைக்காத தொழிலாளர்களுக்கு (ஆப்ரேட்டர் 1/2/3, டெக்னிசியன் 1/2/3) சிறப்பு பதவி உயர்வு அளிக்கப்படும். கூடுதல் விடுப்பு சலுகைகள், நீண்ட காலம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பணி விருது, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்"  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
CV GanesanLabour MinistrySamsung workers
Advertisement
Next Article