Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடங்கியது #Delhi சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
06:58 AM Feb 05, 2025 IST | Web Editor
Advertisement

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியது. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இன்று (பிப்.5) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisement

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லியின் முதலமைச்சர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் மோதுகின்றனர்.

வாக்குப்பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. பாதுகாப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்தலை முன்னிட்டு டெல்லிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. மதுபானக்கடைகள் மூடியிருக்கும். மருத்துவமனை, மருந்தகம் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் டெல்லி போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஏ.ஐ. கேமராக்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து பணியில் போலீசாருடன் சீருடை அல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
Next Article