Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#AssemblyElections | ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்கு எண்ணிக்கை!

06:43 AM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது.

Advertisement

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்.25-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்.1-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் சுமார் 88 லட்சம் பேர் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சேர்த்து 63.88% வாக்குகள் பதிவாகின. அங்கு, தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

அதேபோல், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் அக். 5-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், சுமார் 2 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90% வாக்குகள் பதிவாகின. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள் : Samsung ஊழியர்கள் வேலைநிறுத்தம் | பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு - ஊழியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!

இந்நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை (அக். 8) 8மணியளவில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
assembly electionsharyanaJammu and KashmirNews7Tamilnews7TamilUpdatesvotescounting
Advertisement
Next Article