வாக்காளர் சிறப்பு திருத்தம் - முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 9-ம் தேதி இன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.