Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு வெளியேறிய தீக்குழம்பு!

இந்தோனேசியாவில் லக்கி லக்கி எரிமலை நேற்று வெடித்து சிதறியுள்ளது.
07:40 AM Aug 03, 2025 IST | Web Editor
இந்தோனேசியாவில் லக்கி லக்கி எரிமலை நேற்று வெடித்து சிதறியுள்ளது.
Advertisement

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருக்கும் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் உள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை. 1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என அறியப்படுகிறது. இந்த ஏரிமலையின் அழகைக் காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம்.

Advertisement

ஆனால் சமீப காலமாக இந்த எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. இந்த நிலையில் நேற்று லக்கி லக்கி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது. இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் எரிமலை வெடிக்க தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதன் காரணமாக எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோ மீட்டர் தூரம் ஆறாக ஓடியது. இதனால் எரிமலை அருகே இருக்கும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags :
Indonesialava spewingvolcanoVolcano erupts
Advertisement
Next Article