Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Indonesia-வில் வெடித்து சிதறிய எரிமலை... 9 பேர் பலி!

12:03 PM Nov 04, 2024 IST | Web Editor
Advertisement

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தோனேசியா பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிா்வுக் கோடுகளில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு அவ்வப்போது உள்ளாகிறது. இந்தோனேசியாவில் சுமார் 28.2 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தோனேஷியாவின் நுசா டெங்கரா மாகாணத்தின் பிளோர்ஸ் தீவில் உள்ள எரிமலை நேற்று (நவ.3) இரவு திடீரென வெடித்து சிதறியது.

எரிமலையில் இருந்து வெளிவந்த கரும்புகை அப்பகுதியில் உள்ள கிராமங்களை சூழ்ந்தது. அதேபோல், எரிமலையில் இருந்து தீக்குழம்பும் வெளிவந்தது. இச்சம்பவம் குறித்து உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர்.

எரிமலை வெடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர்.
எரிமலை தொடர் சீற்றத்துடன் காணப்படுவதால் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் கடந்த அக்.27ம் தேதி  மராபி எரிமலை வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக அதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article