எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை
எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஹேலி குப்பி எரிமலையானது 10 ஆயரம் ஆண்டுகளூக்கு பின் முதல்முறையாக இன்று வெடித்துள்ளது.
08:57 PM Nov 24, 2025 IST
|
Web Editor
Advertisement
எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. எர்டா அலே எரிமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. புவியியல் பதிவுகளின் படி இந்த எரிமலை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக வெடிக்கவில்லை.
Advertisement
இந்த நிலையில் தெற்போது இந்த ஹேலி குப்பி எரிமலை இன்று வெடித்துள்ளது. இந்த வெடிப்பால் எரிமலையில் இருந்து கரும்புகை மற்றும் லாவா எரிமலை குழம்பு ஆகியவை வெளியேறி வருகிறது.
செயற்கைக்கோள் தரவுகளின் படி, ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8:30 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் செங்கடலில் அதிக அளவு சாம்பல் வெளியேறி, ஏமன் மற்றும் ஓமன் உள்ளிட்ட தென்மேற்கு அரேபியாவின் சில பகுதிகளை ஏற்படுத்தியுள்ளது.
Next Article