விஷ்ணு விஷாலின் ”ஆர்யன்” பட டீசர் வெளியீடு..!
நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ஆர்யன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
06:33 PM Sep 30, 2025 IST
|
Web Editor
Advertisement
நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ஆர்யன். மேலும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
ஆர்யன் படத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கி படப்பிடிப்பை முடித்தனர்
அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக விஷ்ணு சுபாஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தில் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
Next Article