Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்த விசிக - முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

04:32 PM Feb 12, 2024 IST | Jeni
Advertisement

திமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.  கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை,  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்,  தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், திமுக குழுவுடன் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது.

இதையும் படியுங்கள் : சட்டபேரவையில் நடந்தது என்ன? - ஆளுநர் மாளிகை விளக்கம்!

பேச்சுவார்த்தைக்கு பின் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன்,  “திமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளோம்.  தனி தொகுதிகள் மூன்று பொதுத் தொகுதிகள் ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம்.  முதலில் எந்தெந்த தொகுதி என்பதை திமுக முடிவு செய்து எங்களுக்கு ஒதுக்கீடு செய்தபின்,  நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது தெரியவரும்.  வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என மீண்டும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Tags :
DMKElectionElection2024LokSabhaElectionLokSabhaElection2024MKStalinParliamentElectionParliamentElection2024thirumavalavanVCK
Advertisement
Next Article