விருதுநகர்; குடியிருப்பு பகுதியில் தீ விபத்து - 20 குடிசை வீடுகள் சேதம்!
விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் உள்ள குடியிருப்புகளில் இன்று(ஏப்ரல்.02) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அருகில் இருந்த மற்ற குடியிருப்புகளில் தீ பரவியது. அதனால் 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்து குடியிருப்புகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்கள் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராஜா என்பவரது வீட்டில் சிலிண்டர் எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த வீடுகளில் தீ பரவியது தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்போகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.