Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சேட்டை பிடிச்ச பையன் சார்...." - ஈடன்கார்டன் மைதானத்தில் ப்ராங் செய்த விராட் கோலி!

05:19 PM Apr 21, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும்போது போட்டியின் நடுவே விராட் கோலி செய்த ப்ராங் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன.

KKR மற்றும் RCB அணிகள் இருவரும் தங்களது புள்ளிப் பட்டியலை எதிர் எதிர் துருவத்தில் உள்ளனர். கொல்கத்தா அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் 3வது இடத்தில் உள்ளது. இதற்கு நேர்மாறாக, பெங்களூரு ஏழு போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 10வது இடத்தில் தள்ளாடி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபில் சால்ட் அதிரடியாக விளையாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். 14 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் அனைவரும் அரைசதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த நிலையில் போட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது சீசனில் ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தியவருமான விராட் கோலில் பந்து வீசுவதுபோல தனது பாவணைகள் ஏற்படுத்தினார். கொல்கத்தா வீரர்கள் அனைவரும் விராட் கோலியையே பார்த்தனர். பந்து வீசுவதுபோல ஆக்‌ஷ்ன செய்து விட்டு பந்தினை நடுவரிடம் கொடுத்து விட்டுச் சென்றார். விராட் கோலியின் இந்த செயல் ரசிகர்களை ஃபன் மோடுக்கு அழைத்துச் சென்றது.

Tags :
IPLIPL 2024kkrKKR vs RCBPrankRCBRCB vs KKRVirat Kholi
Advertisement
Next Article