ரஞ்சி கோப்பை கடைசி லீக் ஆட்டங்கள் இன்று தொடக்கம்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கும் #ViratKohli!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் களமிறங்குகின்றன. இதன் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, ஜார்க்கண்டை எதிர்கொள்கிறது.
இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் | Tik Tok-ல் வீடியோ பதிவிட்டதால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்!
இந்த நிலையில், டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களம் இறங்குகிறார். வதோதராவில் நடைபெறும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் பரோடா-ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. இதே பிரிவில் மும்பையில் அரங்கேறும் மற்றொரு முக்கிய ஆட்டத்தில் மும்பை-மேகாலயா அணிகள் களமிறங்குகின்றன.
'பி' பிரிவில் ஆமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத்- இமாசலபிரதேசம் அணிகள் சந்திக்கின்றன. டெல்லியில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.விராட் கோலி ரஞ்சி போட்டியில் கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக விளையாடி இருந்தார்.
அதன் பிறகு தற்போதுதான் களமிறங்க உள்ளார். விராட் கோலி களமிறங்குவது அந்த அணியின் பலத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி ரஞ்சி கோப்பையில் களமிறங்குவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.