சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி! 50-வது சதம் அடித்து அசத்தல்!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தனது 50* ஆவது சதத்தை விளாசி சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
சச்சின் டெண்டுல்கர் தான் விளையாடிய 463 ஒரு நாள் போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் பேட் செய்து 49 சதங்கள் அடித்திருக்கிறார். இது முறியடிக்க முடியாத சாதனையாக இன்று வரை திகழ்ந்தது. இந்த சாதனையை விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் உலக்கோப்பை தொடரில் முறியடிப்பார் என பெரிதும் கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், உலக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களம் இறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இதில் முதல் விக்கெட்டுக்கு களம் இறங்கிய விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படித்தினார்.
இதோடு விராட் கோலி, சச்சினின் மற்றொரு சாதனையையும் இந்த போட்டியில் முறியடித்திருக்கிறார். இந்த உலககோப்பை தொடரில் 674 ரன்கள் அடித்ததன் மூலம், 2003 உலகக் கோப்பை தொடரில் 673 ரன்கள் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை கோலி முறியடித்திருக்கிறார். ஒரு உலகக் கோப்பையில், தனி பேட்டார் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.