Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ViralVideo | 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த கார்...அஜித் கூற வரும் குறியீடு என்ன? வைரலாகும் வீடியோ!

12:35 PM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

அஜித் குமார் அவரது ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன.  இதில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  நடிகர் அஜித் கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் பைக் அல்லது கார் ரைடு சென்று விடுவார்.

அந்த வகையில், அஜித்குமார் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வைரலாகும். அதன்படி, அஜித் குமார் அவரது ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். அதனை குறிக்கும் விதமாக நடிகர் அஜித் காரில் 234 கி.மீ. வேகத்தில் சென்றதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
actor ajithAjith Fansajith kumarViral
Advertisement
Next Article